இந்தியாவின் மறக்கப்பட்ட வெற்றி: 1967 இந்திய சீன சண்டை !!

இந்திய தரைப்படையில் பணியாற்றி ஒய்வுப்பெற்ற அதிகாரியான ப்ரொபல் தாஸ்குப்தா தற்போது “WATERSHED 1967: INDIA’S FORGOTTEN VICTORY OVER CHINA”

என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்த புத்தகத்தில் இந்திய சீன அரசியல், ராஜாங்க மற்றும் ராணுவ ரீதியிலான உறவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.

கடந்த 1962 முதல் 1967 வரையுள்ள 5ஆண்டுகள் காலகட்டத்தில் நிகழ்ந்த பல விஷயங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

கோர்க்கா ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் முன்னாள் அதிகாரியான ப்ரொபல் தாஸ்குப்தா 1967ஆம் ஆண்டு சுமார் 15,000 அடி உயரத்தில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையில் நடந்த இரு தீவிர சண்டைகளை பற்றி எழுதியுள்ளார்.

கடந்த 1965ஆம் ஆண்டு சிக்கீம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு சீனாவுக்கு இந்தியாவகன் மீதான கோபம் அதிகரித்தது. ஏற்கனவே சிக்கீமை ஆக்கிரமிக்க சீனா விரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரு இந்திய பாகிஸ்தான் போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில் 1967ஆம் ஆண்டு “நாது லா” மற்றும் “சோ லா” பகுதிகளில் நடைபெற்ற சண்டைகள் பெரும்பாலும் கவனம் பெறவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.

லெஃப்டினன்ட் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் 1965 பாகிஸ்தான் போருக்கு பின்னர் இந்திய ராணுவ பலத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அந்த நேரத்தில் திபெத் சிக்கீம் எல்லையில் உள்ள ஜியாங்டாங் பகுதியில் சுமார் 18,000அடிகள் உயரத்தில் நமது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் சீன வீரர்களால் கொல்ப்படனர்.

உடனே சுதாரித்து கொண்ட லெஃப்டினன்ட் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் நிலைமை மோசமாவதை முன்கூட்டியே கணித்தார். உடனடியாக கேங்டாங் நகனத்தை தலைமையிடமாக கொண்டிருக்கும் 17ஆவது மலையக போர்ப்பிரிவில் உள்ள 2ஆவது க்ரேனடியர்ஸ் மற்றும் 11ஆவது கோர்க்கா ரைஃபிள்ஸின் 7ஆவது பட்டாலியன் வீரர்களுடன் தயாரனார்.

அதன் பின்னர் நடைபெற்ற சண்டையில் கடும் சேதங்களை இந்திய படைகள் சீன படைகளின் பிரங்கி மற்றும் இயந்திர துப்பாக்கி தாக்குதலால் சந்தித்தாலும் பின்னர் மிக கடுமையாக போரிட்டனர். கோர்க்கா வீரர்கள் பல சீன வீரர்களை நேருக்கு நேர் சண்டையிட்டு கொன்றனர். இவர்களின் வீரத்தால் இந்தியா சீனாவை வெற்றி கொண்டது.

இந்த 1967 போரின் கிடைத்த அனுபவத்தினால் தான் இந்தியா 1986/87 காலகட்டத்தில் சும்தராங் பின்னர் 2017 டோக்லாம் பிரச்சினைகளிலும் விரைந்து நடவடிக்கை எடுக்க உதவியது குறிப்பிடத்தக்கது ஆகும்.