ஜூலை மாதம் இந்தியா வரும் 4 ரஃபேல் விமானங்கள் !!
1 min read

ஜூலை மாதம் இந்தியா வரும் 4 ரஃபேல் விமானங்கள் !!

ஃபிரான்ஸில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளதால் ரஃபேல் போர் விமானங்களின் டெலிவரி தள்ளிப்போகும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி முதல் 4 விமானங்கள் ஜூலை மாதம் இந்தியா வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இவை அதற்கு முன்னரே வர வேண்டியவை ஆகும்.

அதை போல் நமது விமானிகளின் பயிற்சிகளும் ஒன்றரை வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கடுமையான கட்டுபாடுகளுடன் மீண்டும் தொடங்கி உள்ளது.

ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் 11விமானங்கள் வீதம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 18 விமானங்கள் அம்பாலாவில் உள்ள 16ஆவது படையணியில் இணைந்து சேவையை தொடங்கும் எனவும், மீதமுள்ள 18விமானங்களும் மேற்கு வங்காள மாநிலம் ஹஷிமாராவில் உள்ள படைத்தளத்தில் இருந்து இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.