ஏற்றுமதிக்கு தயாராகும் தேஜஸ்; விலை மலிவான நவீன ரகத்தை ஏற்றுமதி செய்ய திட்டம்

விலை மலிவான தேஜாஸின் ஏற்றுமதி ரகம் 2023ல் வெளிவருகிறது !!

சமீபத்தில் HAL நிறுவனம் இந்திய விமானப்படைக்கு தயாரிக்க உள்ள 83 இலகுரக தேஜாஸ் விமானங்களின் விலையை முதலில் இருந்ததை விட பாதியாக குறைத்துள்ளது (ஒரு விமானத்தின் விலை 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள்).

தற்போது வெளியாகி உள்ள சில தகவல்கள் படி , 2023ஆம் ஆண்டு தேஜாஸின் ஏற்றுமதி வடிவம் தயாராகும் என கூறப்படுகிறது. இது தற்போது உள்ள தேஜாஸ் மார்க்1 விமானத்தை விட சற்றே விலை அதிகமாகவும் மார்க் 1ஏ ரகத்தை விட விலை குறைவாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தேஜாஸின் ஏற்றுமதி ரக விமானம் வாங்குபவரின் தேவைக்கேற்ப தகவமைக்கப்படும் வகையில் தயாரிக்கப்படும்.

அதில் ELA2032/MMR மற்றும் ELA2052, உத்தம் ஏசா ரேடார் இவற்றுடன் அஸ்திரா BVRAAM SAAW, Inertial Guided Bomb போன்றவற்றை சுமக்கும்.

தற்போது தேஜாஸ் விமானங்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஆயுதங்களும் விற்பனைக்கு வைக்கப்படும் ஆனால் வாங்குபவருக்கு குறிப்பிட்ட வேறு சில ஆயுதங்கள் வேண்டுமெனில் அவற்றை சுமக்கும் வகையில் விமானம்