முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர் ஷேக் ரம்ஸான் காலமானார் !!

  • Tamil Defense
  • April 18, 2020
  • Comments Off on முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர் ஷேக் ரம்ஸான் காலமானார் !!

நேதாஜி தேச விடுதலைக்கென உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் சேவை புரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷேக் ரம்ஸான் ஏப்ரல் 6 அன்று இயற்கை எய்தியுள்ளார்.

ரத்தத்தை தாருங்கள் சுதந்திரத்தை தருகிறேன் எனும் நேதாஜியின் கூற்றால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்த அவர் பர்மா மற்றும் ஜப்பானில் போரில் பங்கேற்று போர்க்கைதியாக இருந்தார்.

92ஆவது வயது வரை குடை சரி செய்யும் பணி செய்து தான் தனது மகள் மற்றும் மகனையும் வளர்த்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஒய்வூதியம் நிராகரிக்கப்பட்டது.

எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி நாட்டுக்கு உழைத்த அவர் கடைசியில் வெளியில் தெரியாமல் நிராகரிக்கப்பட்டது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயமாகும்.