
நேற்று நடைபெற்ற குப்வாரா என்கவுன்டரில் 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தரைப்படையின் 4ஆவது சிறப்பு படை பட்டாலியனின் 5வீரர்கள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த சண்டையில் அவர்கள் அனைவரும் வீரமரணமடைந்தனர்.
செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கமளித்த 15ஆவது கோர் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ராஜூ, சண்டை நடைபெற்ற பகுதி மிகவும் மோசமான இயற்கை சூழல் நிலவும் பகுதியாகும். சுமார் 12,000அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும், மேலும் மார்பளவு வரை ஆழம் கொண்ட பனியில்,
30 கிலோ முதுகுப்பையுடன் பயங்கரவாதிகளை விரட்டி பிடித்து கொன்றுள்ளனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், 2 கைத்துப்பாக்கிகள், 2 UBGL, சாட்டிலைட் போன்கள், உணவுப்பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த ஆபரேஷனில் பங்கேற்ற மற்றொரு சிறப்பு படை வீரர் கூறுகையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடம் ஒரு ஆழமான பகுதி, மிக நெருங்கிய நிலையில் சண்டை நடைபெற்றது (CLOSE CONTACT BATTLE) , சுபேதார் சஞ்சீவ் சாரின் உடல் கொல்லப்பட்ட பயங்கரவாதியின் உடலுக்கு மிக அருகிலேயே இருந்தது என்றார்.