எட்டு இராணுவ வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதி

  • Tamil Defense
  • April 17, 2020
  • Comments Off on எட்டு இராணுவ வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதி

இராணுவத்தில் பணிபுரியும் எட்டு இராணுவ வீரர்களுக்கு இதுவரை கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி முகுந்த் நரவனே வெள்ளியன்று தெரிவித்துள்ளார்.

இவர்களுள் இரண்டு பேர் மருத்துவர்கள் மற்றும் ஒருவர் நர்சிங் உதவியாளர் ஆவார் என ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் தளபதி கூறியுள்ளார்.

மொத்த இராணுவத்திலும் இதுவரை எட்டு வீரர்களுக்கு மட்டுமே கொரானா தொற்று உள்ளது.4 வீரர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.லடாக்கில் ஒரு வீரர் குணமடைந்து பணியில் இணைந்துவிட்டார் என தளபதி நரவனே அவர்கள் தெரிவித்துள்ளார்.

தளபதி இரு நாள் பயணமான தற்போது காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

தற்போது வரை கடற்படை மற்றும் விமானப்படையில் யாருக்கும் தொற்றுகள் ஏற்படவில்லை.ஆனால் மூன்று வீரர்கள் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.