
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இந்திய விமானப்படையின் 4போர் விமானிகள் ககன்யான் திட்டத்திற்காக பயிற்சி பெற்று வந்தனர்.
தற்போது கொரோனா அபாயம் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதைப்போல ரஷ்யாவிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பட்டுள்ளதால், இந்த பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விமானப்படையின் விமானிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாத இறுதியில் மீண்டும் பயிற்சிகள் தொடங்கும் எனவும், திட்டமிட்டபடி 2022ஆம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி காலம் சுமார் 12 மாதங்களாகும் ஆனாலும் இது போன்ற சூழல்களை சமாளிக்க சுமார் 3மாத காலம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.