
ஃபிரான்ஸின் போர்டியக்ஸ்- மெரிக்னக் நகரத்தில் உள்ள ரஃபேல் விமான தொழிற்சாலை மார்ச் தாண்டி முடப்பட்டால் இந்திய விமானப்படைக்கான ரஃபேல் விமானங்களின் டெலிவரி தள்ளி போகும் அபாயம் உள்ளது.
பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது மார்ச் 31 தேதிக்கு பின்னரும் இத்தொழிற்சாலை முடப்பட்டிருக்கும் பட்சத்தில் அங்கிருக்கும் இயந்திரங்கள் மீண்டும் திறக்கும் போது பராமரிப்பு செய்யப்பட்ட பின்னரே உற்பத்தி பணிகள் துவங்கும். மேலும் இந்த பராமரிப்பு பணிகள் அதிக காலம் நடக்கும். ஆகவே சரியான சமயத்தில் இந்திய விமானப்படைக்கான 36விமானங்களின் டெலிவரி நடைபெற முடியாத சூழல் உள்ளது.
இதன் காரணமாக அரதபழைய மிக்21 விமானங்களை ஒதுக்குவதற்கு ரஃபேல் விமானங்கள் வரும் வரை காத்திருக்க வேண்டியதாகிறது.