மருத்துவ உபகரணங்களை தயாரித்து தள்ளும் DRDO வின் ஏவுகணை விஞ்ஞானிகள் !!

  • Tamil Defense
  • April 5, 2020
  • Comments Off on மருத்துவ உபகரணங்களை தயாரித்து தள்ளும் DRDO வின் ஏவுகணை விஞ்ஞானிகள் !!

தேவை தான் கண்டுபிடிக்க தூண்டுகிறது, அந்த வகையில் தற்போது கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்துள்ள DRDO விஞ்ஞானிகள் மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள் என தயாரித்து தள்ளுகின்றனர்.

சுருங்க சொல்லப்போனால் ஹைதராபாத் நகரில் உள்ள அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில் பணியாற்றும் நாட்டின் தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானிகள் இரவும் பகலும் உழைத்து இத்தகைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர்.

போர்க்கால அடிப்படையில் இவர்களின் கண்டுபிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா தொற்று நாட்டில் முதலில் நுழைந்ததுமே அரசின் உத்தரவு இல்லாமல் தங்களது சொந்த பணத்தில் கண்டுபிடிப்புகளை உருவாக்கினர். இதன் பின்னரே அரசு நிதி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த கண்டுபிப்புகளில் உள்ள பெரும்பாலான கருவிகள் நமது முக்கிய ஏவுகணைகளில் பயன்படுத்தி வரப்படும் தொழில்நுட்பங்களாகும். அவற்றில் சில – மருத்துவ பணியாளர்களுக்கான முழு முகத்தையும் பாதுகாக்கும் வகையிலான முகமூடி , வென்டிலேட்டர் பம்புகளுக்கான BRUSHLESS DC MOTOR இது ஏவுகணைகளை கட்டுபடுத்த உதவுகிறது, High response Solenoid Valves (அதி உணர் திறன் கொண்ட சாலினாய்டு வால்வுகள் இவையும் ஏவுகணைகளை கட்டுப்படுத்த உதவும், இன்னும் பல..

DRDO வின் தயாரிப்பு பிரிவின் இயக்குனர் ஜெனரல் ஐஇ.என்.ராவ் ஹைதராபாத் நகரில் இருந்து இப்பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

ஒரே நேரத்தில் பல பேருக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையிலான வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

பலர் கேட்கலாம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மக்களுக்கு உதவுமா என, தற்போது அந்த ஆராய்ச்சி பணிகள் தான் முன்னனியில் இருந்து உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.