COVID19 நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாத உடனடியாக சாப்பிடும் வகையிலான உணவுகளை தயாரிக்கும் DRDO !!

  • Tamil Defense
  • April 6, 2020
  • Comments Off on COVID19 நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாத உடனடியாக சாப்பிடும் வகையிலான உணவுகளை தயாரிக்கும் DRDO !!

மைசூரில் அமைந்துள்ள DRDO வின் ஒரு பிரிவான பாதுகாப்பு துறை உணவு ஆராய்ச்சி ஆய்வகம் (DFRL – Defence Food Research Laboratory) பல வருடங்களாக ராணுவத்திற்கு நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாத உணவு பொருட்களை தயாரித்து வருகிறது.

ராணுவ வீரர்கள் எளிதில் செல்ல முடியாத போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் பணியமர்த்தப்படும் போது இத்தகைய உணவுகளை கொண்டு செல்வார்கள்.

இந்த உணவு பொருட்களை உடனடியாக எடுத்து சமைத்து உண்ண முடியும் மேலும் இதில் அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படும்.

தற்போது கொரோனா பிரச்சினை நிலவி வரும் சூழலில் காய்கறிகள், இறைச்சி பொருட்கள் கிடைப்பதற்கு கடினமான சூழல் ஏற்பட்டால் இந்த வகை உணவுகளை வழங்கும் வகையில் DRDO தனது தயாரிப்பு திறனை அதிகரித்துள்ளது.

இந்த உணவு வகைகள் ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் போக்குவரத்திற்கும் எளிதாக இருக்கும்.

இந்த வகை உணவு பட்டியலில் சப்பாத்தி, சைவம் மற்றும் அசைவம், தேனீர், இனிப்பு வகைகள் அடங்கும் என்பது கூடுதல் சிறப்பு.

ராணுவ வட்டாரங்களில் இந்த வகை உணவுகளை RTE – READY TO EAT meals அல்லது MRE – MEALS READY TO EAT என அழைப்பார்கள்.