COVID19 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள பாதுகாப்பு உடைகள் !!

  • Tamil Defense
  • April 2, 2020
  • Comments Off on COVID19 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள பாதுகாப்பு உடைகள் !!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு உடைகளை (BIO SUIT) தயாரித்துள்ளது.

DRDO வின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மையங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை ஒன்றாக இணைந்து உருவாக்கி உள்ளனர்.மேலும் இது பல்வேறு கட்ட கடினமான சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல்வாழ்வு துறையின் அறிக்கையில் பாதுகாப்பு உடைகளுக்கான தகுதிகளை தாண்டியதாக இந்த பாதுகாப்பு உடை உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு உடையை தயாரிக்க DRDO நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது மேலும் ஒரு சிறப்பு கலவை பூசப்பட்ட நூலிழைகளையும் பயன்படுத்தி உள்ளனர்.

கூடுதல் சிறப்பாக நீர்மூழ்கி கப்பல்களில் சீல் செய்ய பயன்படுத்தப்படும் Special Sealantஐ கொண்டு Seam Sealing tape கு பதிலாக seal செய்ய பயன்படுத்தி உள்ளனர்.

இதனை கோவையில் உள்ள Southern India Textile Research Association (SITRA) வில் வெற்றிகரமாக சோதித்து உள்ளனர்.

தற்போது ஒரு நாளைக்கு 7,000 பாதுகாப்பு உடைகளை தயாரிக்க முடியும் இதனை சுமார் 15,000ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.