Breaking News

DRDOவின் அதிநவீன கொரோனா சார்ந்த கண்டுபிடிப்புகள் !!

  • Tamil Defense
  • April 13, 2020
  • Comments Off on DRDOவின் அதிநவீன கொரோனா சார்ந்த கண்டுபிடிப்புகள் !!

தற்போது கொரொனாவால் உலகம் முழுவதும் சூழ்நிலை மிகவும் மோசமாகி வருகிறது. இந்தியாவிலும் பலர் குணமாகி வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

எனவே மருத்துவ கட்டமைப்பை துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் DRDO பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி உள்ளது,
அதில் சில –

  • VISOR BASED FULL FACE SHIELD
  • ISOLATION SHELTER
  • MOBILE AREA SANITISATION SYSTEM, ADVANCED N99 MASKS
  • PERSONAL SANITISATION EQUIPMENT
  • PORTABLE BACKPACK AREA SANITISATION EQUIPMENT
  • ADVANCED PPEs
  • VENTILATORS
  • SANTISERS

வருங்காலத்தில் மருத்துவ உபகரணங்களுக்கான தேவையை கருத்தில் கொண்டு, DRDOவின் Defence Bioengineering and Electromedical Labarotary ( பாதுகாப்பு உயிரிபொறியியல் மற்றும் மின்னனுமருத்துவ உபகரணங்கள் ஆய்வகம்) பாரத் எலக்டரானிக்ஸ் மற்றும் ஸகேன்ரே நிறுவனம் ஆகியவை இணைந்து மருத்துவ உபகரணங்களை தயாரித்து வருகின்றன.

DRDO தயாரித்துள்ள Disinfection Chamber தற்போது நாட்டின் பல பகுதிகளில் பயன்படுத்தி வரப்படுகிறது.

இதில் ஒரு நபர் உள்நுழைந்ததும் சென்சார் மூலமாக இயங்கும் இந்த அமைப்பு 25 நொடிகளுக்கு கிருமினாசினியை தெளிக்கும். இதில் சுமார் 650பேருக்கு தெளிக்க தேவையான 700லிட்டர் கிருமினாசினி கலவை ஒரு தொட்டியில் இருக்கும்.

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்புக்கு என DRDO தயாரித்துள்ள பாதுகாப்பு கவச உடைகள் ராணுவ வீரர்களுக்கான உயிரியல் , வேதியல் , அணு போர்முறை சார்ந்த பாதுகாப்பு உடைகளை அடிப்படையாக கொண்டதாகும். ஒரே நாள் 15,000 உடைகளை தயாரிக்கும் அளவுக்கு திறனை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் தயாரித்துள்ள முக கவசமானது ஒரு Visor அமைப்பை கொண்டிருக்கும், இது முழு முகத்திற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. இதில் உள்ள கடினமான பொருட்கள் சோளமாவு மற்றும் கரும்பை கொண்டு தயார் செய்யப்படுகிறது. இதனால் இயற்கைக்கும் உகந்ததாகும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இனியும் பல கருவிகளை கண்டுபிடித்துள்ளது.