
மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 55 வயதான சப் இன்ஸ்பெக்டரான முகமது உசேன் அவர்கள் கொரானா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
மயூர் விகார் கேம்பில் ஏற்கனவே கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மற்றொரு சிஆர்பிஎப் வீரரின் நர்சிங் உதவியாளர் ஒருவரால் இவருக்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“வீரமான துணை ஆய்வாளரான சிஆர்பிஎப் வீரர் முகமது இம்ரம் உசேன் மறைவு வருத்தம் அளிக்கிறது.ஒரு ஹீரோவாக கொரானாவை எதிர்த்து அவர் போரிட்டுள்ளார்.அவரது பணி நம் அனைவரையும் ஊக்கப்படுத்தப்படுவதாய் அமைந்துள்ளது” என மத்திய அமைச்சர் அமித் ஷா அவர்கள் தெரிவித்துள்ளார்.
வீரருக்கு நமது பக்கத்தின் சார்பாக வீரவணக்கத்தை பதிவு செய்கிறோம்