
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் ரோந்து சென்றுகொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கிரேனேடு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் சிஆர்பிஎப் தலைமை காவலர் சிவ் லால் நீதம் வீரமரணம் அடைந்தார்.
காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து ரோந்து சென்றபோது இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் வீரர் கடுமையான ஸ்பிலின்டர் காயம் அடைந்துள்ளார்.பின்பு வீரமரணம் அடைந்தார்.இந்த தாக்குதலில் மற்றுய் ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிஜிபெகரா பகுதிகளை சுற்றி வளைத்த வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிஜிபெகரா பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பற்ற சிஆர்பிஎப் வீரர்கள் பணியமர்த்தப்பட்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
வீரர் சிஆர்பிஎப் படையின் 116வது பட்டாலியனைச் சேர்ந்தவர் ஆவார்.