
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் காவல்படை முகாமை பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் மட்டும் காயமடைந்துள்ளதாகவும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடனடியாக களமிறங்கிய பாதுகாப்பு படைகள் அந்த பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.