ஆபரேஷன் சஞ்சீவனி,  மாலத்தீவுகளுக்கு உதவிய இந்தியா !!
1 min read

ஆபரேஷன் சஞ்சீவனி, மாலத்தீவுகளுக்கு உதவிய இந்தியா !!

30க்கும் மேற்பட்ட நாடுகள் மருந்து பொருட்களுக்காக இந்தியாவிடம் உதவி கோரியது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்தியாவும் இந்த கோரிக்கையை ஏற்றுகொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்று ஆபரேஷன் சஞ்சீவனி எனும் நடவடிக்கையின் கீழ் இந்திய விமானப்படையின் சி130ஜே சூப்பர் ஹெர்க்யுலிஸ் விமானத்தில் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை மாலத்தீவுகளுக்கு அனுப்பியது.

இந்திய அரசு அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முன்னமே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.