COVID19 பிரம்மாஸ் ஏவுகணை சோதனை நிறுத்தம் !!

  • Tamil Defense
  • April 5, 2020
  • Comments Off on COVID19 பிரம்மாஸ் ஏவுகணை சோதனை நிறுத்தம் !!

கொரோனா தொற்று தற்போது நாட்டில் தீவிரத்தன்மை அடைந்துள்ள நிலையில் தாக்குதல் வரம்பு அதிகரிக்கப்ட்ட
பிரம்மாஸ் ஏவுகணையின் (BRAHMOS ER) சோதனையை DRDO நிறுத்தியுள்ளது.

இந்தியா தற்போது ஏவுகணை தொழில்நுட்ப கட்டுபாட்டு அமைப்பில் (Missile Technology Control Regime – MTCR) உறுப்பு நாடாக இணைந்துள்ளதால் தற்போது கூட்டுதயாரிப்பு ஏவுகணைகளின் வரம்பை அதிகரிக்க முடியும்.

அந்த வகையில் பிரம்மாஸ் ஏவுகணையின் 290கிமீ செல்லும் ரகம் சுமார் 400கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 500கிமீ ரகம் 600கிமீ செல்லும் வகையில் மேம்படுத்தபட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்க்ராம்ஜெட் என்ஜின் கொண்ட பிரம்மாஸ் தற்போது அதிக எரிபொருளையும் சுமக்க முடியும் என்பதால் சுலபமாக மாக் 3 அல்லது 4 வேகத்தில் பறக்க முடியும் அதாவது மணிக்கு 3600 முதல் 4900கிமீ வேகம் வரை பறக்கும் திறனாகும்.

இந்தியா ஏவுகணை தொழில்நுட்ப கட்டுபாட்டு அமைப்பில் இணைந்த பிறகு பிரம்மாஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை சுமார் 800கிமீ வரை அதிகரிப்பதாக தான் இருந்தது. பின்னர் 400கிமீ வரை அதிகரித்து சோதனை வெற்றி பெற்ற பின்னர் 800கிமீ தொலைவுக்கு செல்லும் வகையில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.

முதன் முதலில் பிரம்மாஸ் ஏவுகணை 2001ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்ட பின்னர் பலவேறு மேம்பாடுகள் இந்த ஏவுகணையில் செய்யப்பட்டுள்ளன.

இந்திய ராணுவ திட்டவியலாளர்கள் வரும் காலங்களில் அதிநவீன தொழில்நுட்பம், தொலைதூர தாக்குதல் திறன், அதிக வேகம் என பிரம்மாஸின் திறன் குன்றாமல் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.