உலகின் மிகப்பெரிய கடற்படை கப்பல்களில் ஒன்றை தாக்கிய கொரோனா தொற்று !!

  • Tamil Defense
  • April 1, 2020
  • Comments Off on உலகின் மிகப்பெரிய கடற்படை கப்பல்களில் ஒன்றை தாக்கிய கொரோனா தொற்று !!

அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் ரக விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் தியோடர் ருஸ்வெல்ட் கப்லின் மாலுமிகளை கொரோனா வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது.அணு சக்தியில் இயங்கும் இந்த கப்பல் சுமார் 5000 வீரர்கள் பணியாற்றும் அளவுக்கு பிரமாண்டமான கப்பலாகும்.

இந்த 5000 பேரில் சுமார் 200பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அமெரிக்க கடற்படையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது காரணம் அமெரிக்க கடற்படையின் பிரமாண்மான கப்பல்களில் ஒன்றும் உலக அளவில் அமெரிக்காவின் சக்தியை நிலைநாட்டும் 10 பிரமாண்ட கடற்படை கப்பல்களில் ஒன்று இந்த நோயால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இத்தொற்று உறுதி செய்யப்பட்ட சில நாட்களுக்கு முன்பு வியட்னாமின் டா நாங் துறைமுகத்தில் இக்கப்பல் சென்றிருந்தது அங்கு இக்கப்பலின் மாலுமிகள் வியட்நாம் மக்களை சந்தித்து கலந்து பேசி சில நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்.

இந்த கப்பலின் தலைமை கட்டளை அதிகாரியான கேப்டன். ப்ரெட் காஸியர் கூறும்போது முதலில் 5 பேரை தான் கொரோனா பாதித்தது அவர்களை அடையாளம் கண்டவுடன் கப்பலை உடனடியாக பிலிப்பைன்ஸ் கடல்பகுதியில் உள்ள எங்களது கடற்படை தளமான குவாம் தீவிற்கு கப்பலை கொண்டு சென்று அவர்களை தனிமைபடுத்தினோம் ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து 200வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். பொதுவாக கடற்படை கப்பல்களில் இடவசதி பெரிய அளவில் இருப்பதில்லை இதன் காரணமாக வீரர்கள் ஒருவருடன் ஒருவர் நெருங்கி பணியாற்றும் ஒய்வெடுக்கும் உண்ணும் சூழல்கள் நிலவுவதால் கொரோனா தொற்று மிக வேகமாக பரவும் அபாயம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

நிச்சயமாக வீரர்களை பாதுகாப்பாக வைக்க வேண்டிய அதே நேரத்தில் கப்பலையும் சுத்தம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்கு தயாராக வைத்தல் அவசியம்.

கப்பலின் குழுவில் 10% சதவீதம் வீரர்கள் எப்போதும் கப்பலில் சுத்தம் செய்யும் பணிக்கும் கப்பலின் அணு உலையை சீராக இயக்கும் பணியை மேற்கொள்ளவும் இருப்பது அவசியமாகிறது என்றார்.

இதுகுறித்து கேப்டன் ப்ரெட் காஸியர் அமெரிக்க அரசுக்கும் கடற்படை தலைமையகத்திற்கும், நோய் தடுப்பு மையத்திற்கும் விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.