
தற்போது கொரோனா தொற்று காரணமாக இநீதியாவில் ஊரடங்கு மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ஊரடங்கில் இருந்து பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு விலக்கு அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா காவல்துறையினர் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் இந்த நிறுவனங்களில் பணிக்கு செல்லும் பணியாளர்கள் காவல்துறையினரால் அனுமதிக்கபடவில்லை, இது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன்படி தண்டனைக்குரிய குற்றமாகிறது, மேலும் இச்சட்டத்தின் அடிப்படையில் ஒராண்டு வரை சிறை தண்டனை வழங்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
HAL அதிகாரிகள் கூறுகையில் பல பகுதிகளில் மக்கள் கொரோனா காரணமாக சாலைகளை அடைத்து வைத்துள்ளதும் எங்கள் ஊழியர்கள் பணிக்கு வர தடையாக உள்ளது என்றும், இதுவரை 10% பணியாளர்கள் மட்டுமே மிக கடுமையான சிரமத்துக்கு இடையில் காவல்துறையிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இந்த குழப்பத்தால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் சார்ந்த தயாரிப்புகள் முடங்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் லாக்ஹீட் மார்ட்டின், போயிங், ரேய்தியான், புல் டெக்ஸ்ட்ரான், ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களின் பணியாளர்களுக்கு தேச பாதுகாப்பு நலன் கருதி ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.