
இன்று உலகின் மிகஉயர போர்க்களம் இந்தியாவினுடையது.அதற்கு நமது வீரர்களின் தியாகம் தான காரணம்.இன்றுவரை அது தொடர்கிறது.ஆனால் முன்பொருநாள் அதை பாகிஸ்தான் அடைய முயன்றது.அதை காப்பாற்றிய பெருமை மலையேறும் வீரரான கலோ நரேந்திர குமார் தான் காரணம்.அதிகம் அறியப்படாத அவரது தியாகத்தை பற்றி காணலாம்.
இராணுவ வட்டாரங்களில் அவர் “புல்” குமார் என அறியப்படுகிறார்.அதாவது “காளை” குமார் என தமிழில் பொருள் கொள்ளலாம்.இந்த புனை பெயரை அவர் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயிலும் போது பெற்றார்.அங்கு நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் தன்னை விட ஆறுஅடிஉயரம் மற்றும் கடினமான எதிர் வீரரும் அவரது சீனியருமான சுனித் பிரான்சிஸ் ரோட்ரிக்ஸ் அவர்களை எதிர்கொண்டார்.சண்டையில் சுனித் பிரான்சிஸ் வெற்றி பெற்றார்.பின்னாளில் அவர் இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.மறுபுறம் நரேந்திர குமார் தோற்றாலும் “காளை ” குமார் என்ற பெயர் நிலைத்துப்போனது.கட்டுக்கோப்பான வீரர்.சவால்கள் பிடிக்கும்.ஒற்றை மனத்துடன் சவாலை எதிர்கொள்பவர்.
இந்த பண்புகள் தான் அவரை கிட்டத்தட்ட தனிக்கையாக சியாச்சினில் இந்தியாவின் இருப்பை உறுதிசெய்ய போதுமானதாக இருந்தது.ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் நமது வீரர்கள் இதை சாதித்தனர்.அவர் எப்படி இதை சாதித்தார் என காண்போம்.
ஒரு அமெரிக்க மேப்புடன் இருந்த ஜெர்மானியர் ஒருவரிடம் இருந்து இந்த கதை துவங்குகிறது.1970களில் குல்மார்கில் இருந்த உயர்அடுக்கு போர்முறை பள்ளியின் தலைவராக கலோ குமார் இருந்தார்.மலைசார் போர்முறைகளுக்கு அது தான் பள்ளி.
அந்த ஜெர்மன் ஆய்வுப்பயணி அவர்களுடன் ஏற்கனவே கலோ குமார் லடாக்கின் இந்துஸ் ஆற்றின் முன்நிலைகளுக்கு பயணித்துள்ளார்.அவர் ஒரு அமெரிக்க தயாரிப்பு மேப்பை கலோ குமார் அவர்களிடம் காட்டி வடக்கு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி கிழக்கில் அவர் நினைத்ததைவிட நீண்ட தூரம் நீட்டப்பட்டு வரையப்பட்டதை கண்டார்.
அமெரிக்கா கிழக்கு பக்க காரகோரம் மலைத்தொடரின் பெரிய பகுதி ஒன்றை பாகிஸ்தானுடையது போல வரைந்திருந்தது.இதை பார்த்து கடும் கோபமடைந்த கலோ குமார் அந்த மேப்பை வாங்கா அதை நேரடியாக இராணுவத்தின் நடவடிக்கை பிரிவின் தலைவருக்கு அனுப்பினார்.
இது மிகவும் ஆபத்தானது என்பதை உணர்ந்து அந்த பகுதிக்கு தன்னார்வலாக ஒரு விசிட் அடிக்க தன் மாணவர்களை ஒருங்கிணைத்தார்.இதை இரகசியமாக செய்ய நினைத்து அதற்கு “செய்முறை பயிற்சி செசன்”எனப் பெயரிட்டார்.
தனது உயர் அடுக்கு பயிற்சி பள்ளியில் இருந்து சில மாணவர்களை தேர்ந்தெடுத்து அதுவரை ஆராயப்படாத அந்த மலைப்பகுதிக்குள் நுழைந்தார்.சியாச்சினின் இதயப் பகுதிக்குள் நுழைந்த முதல் இந்தியக்குழு அது தான்.இரு ட்ரில்லியன் க்யூபிக் அடி பனிப்பிரதேசமாக அது பரந்திருந்தது.
மெதுவாக நேர்த்தியாக குழு கிளாசியருக்குள் நுழைந்து.பனிச்சரிவில் இருந்து மிக கவனமாக அந்த இரக்கமே இல்லாத -50 டிகிரி குளிரில் குழு சென்றது.
இதில் நாம் கவனிக்கப்படவேண்டியது என்னவன்றால் எந்தவித வரைபடமோஅல்லது நவீன ஆயுதங்களோ இல்லாமல் குழு இதை திறம்பட செய்தது.பல தலைமுறைக்கு முன்னாள் பிரிட்டிஷார் பெயரிட்ட சில மலைகளின் பெயர் மற்றும் அங்குள்ள முகடுகளை பற்றி குறைந்தளவே தகவல்களை வைத்திருந்தனர்.
குழு வந்த செய்தி கசிந்து எல்லைக்கு மறுபுறம் இருந்த பாகிஸ்தானியர்களுக்கு தெரிந்துபோக அவர்கள் போர்விமானங்களில் பறந்து வண்ணப் புகையை வீசி தேட தொடங்கினர்.கலோ குமார் அவர்களுடைய குழு வீரர்களிடையே எந்தவித ஆயுதங்களும் இல்லை.அவர்கள் வந்த வழிமுழுதும் பாகிஸ்தானிய சிகரெட் பாக்கெட்டுகள்,உணவு கேன்கள் மற்றும் மறையேற உதவும் கருவிகள் போன்றவற்றை சேகரித்திருந்தனர்.இதன் மூலம் யாரும் அறியா வண்ணம் பாகிஸ்தானிய படைகள் சியாச்சினில் ஊடுருவி வருவதை கலோ குமார் உறுதிசெய்தார்.பறந்து வந்த பாகிஸ்தானிய விமானங்களை புகைப்படம் எடுத்தார்.அதன் பிறகு அந்த குழு தளம் திரும்பியது.
இந்த உளவுத் தகவல்களை கலோ குமார் இராணுவத்திற்கு அனுப்பி இராணுவத்தை ஒப்புக்கொள்ள வைக்க சிலகாலங்கள் பிடித்தது.நிலைமையின் ஆபத்தை விளக்கி உயரதிகாரிகளை சம்மதிக்க வைத்தார்.அதன் பிறகு 1981ன் முதல் பகுதியில் தான் மொத்த கிளாசியர் பகுதியையும் வரைபடத்தில் கொண்டு வர அனுமதி அளித்தது இராணுவம்.
இந்த சமயத்தில் சியாச்சினில் இருந்த கலோ குமார் 24,350 அடி உயரமுள்ள சியா கங்ரி மலை ஏறிய முதல் இந்தியர் என பெயர்பெற்றார்.இந்த மலையில் இருந்து பார்த்தால் பரந்த சியாச்சின் கிளாசியரை பார்க்க இயலும்.விரிவான அறிக்கையுடன் திரும்பிய கலோ அந்த அறிக்கையை இராணுவ தலைமையகத்திற்கு அனுப்பினார்.
அடுத்த வருடம் அவரது சியாச்சின் பயணங்கள் குறித்து அவர் வீக்ளி நாளிதழில் எழுதினார்.இந்திய இராணுவம் சியாச்சின் பிரச்சனையில் ஈடுபடுவதை உணர்ந்த பாகிஸ்தான் சியாச்சினை தன்வசப்படுத்த அதிக வீரர்களை அனுப்பியது.
இந்த நேரத்தில் பாகிஸ்தான் இராணுவம் அதிக அளவிலான மலைசார் உடைகளை லண்டனில் வாங்குவதை இந்திய உளவுத்துறை கண்டறிந்தது.இது மட்டும் நடக்காதிருந்தால் அப்போதே பாக்-சீனா இணைந்து காரகோரம் பாஸ் வழியாக பாக்-சீனா எகானாமிக் காரிடரை அமைத்து அது லடாக் பிராந்தியத்திற்கு மாபெரும் பிரச்சனையாக வந்திருக்கும்.
இதை புரித்து கொண்ட இராணுவம் உடனடியாக குமான் ரெஜிமென்ட் வீரர்களை அனுப்பி சியாச்சின் மற்றும் சால்டாரோ மலைத் தொடரை கைப்பற்ற உத்தரவிட்டது.
ஆபரேசன் மெஹ்தூத் என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கியது.விமானப்படை வானூர்திகள் பிலபோன்ட் பாஸ் அருகே வீரர்களை தரை இறக்கியது.
ஒரே வாரத்தில் நமது படைகள் பாக்படைகளை வீழ்த்தி உலகின் உயர்ந்த போர்க்களத்தை தனதாக்கின.எந்த ஆயுதம் அவர்களின் வெற்றியை உறுதி செய்தது?கலோ குமார் மற்றும் அவரது வீரர்களால் தயார் செய்து கொடுக்கப்பட்ட விரிவான வரைபடம்,புகைப்படம் மற்றும் கானொளிகள் தான்
தொடர்ந்து வந்த வருடங்களில் கிளாசியரில் இருந்த ஒரு நிலைக்கு கலோ குமார் தளம் என பெயரிடப்பட்டது.உயிருடன் இருக்கும் ஒரு வீரரை இதுபோல் கவுரவிப்பது அரிதானதே.
அவரது தொடர்சாதனைகளில் சியாச்சினை கைப்பற்ற உதவியது ஒன்று தான்.அவர் திறமை வாய்ந்த மலையேறியும் ஆவார்.1961ல் பனியில் மலையேறியதால் அவரின் நான்கு கால் விரல்கள் ப்ரோஸ்பைட் எனப்படும் நிலையில் சிக்கி இழந்துள்ளார்.அதன் பிறகு 1964ல் நந்தாதேவி சிகரத்தை ஏறிய முதலாமவர் எனபெயர் பெற்றார்.1965ல் ஏவரெஸ்ட்,1976ல் கஞ்சன்சங்கா மலையின் வட கிழக்கு முகம் வழியாக ஏறியுள்ளார்.
அவரும் அவரது நீண்டகால நண்பர் டென்சிங் நார்கே அவர்களும் ஆக்சிஜன் இல்லா டெத் ஷோன் பகுதியில் 8000மீ உயரத்திற்கு 20முறைக்கும் மேல் சென்றுள்ளனர்.
இந்தியாவில் அதிகம் விருதுகள் பெற்ற ஒருசில வீரர்களில் கலோ குமார் அவர்களும் ஒருவர்.பரம் விசிஷ்ட் சேவா விருது பெற்ற ஒரே கலோனல் அவர் தான்.பத்ம ஸ்ரீ ,கீர்த்தி சக்ரா,அதிவிசிஷ்ட் சேவா விருது, அர்ஜீனா விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.அதே போல ஐஎம்எப் தங்க விருதையும் பெற்றுள்ளார்.
இருந்தும் மிகச் சிலரே இந்தியாவில் கலோனர் குமார் பற்றி தெரிந்துவைத்துள்ளனர்.தேசப் பாதுகாப்பு மற்றும் மலைஏறிதலில் இந்தியாவின் பாதுகாப்பையும் இந்தியாவிற்கு பெருமையும் தேடிதந்துள்ளா்.
கலோ குமார் அவர்களுக்கு மிகப் பெரிய வணக்கம்