மும்பை விமான நிலையத்தில் மத்திய தொழிற்காவல் படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு !!

  • Tamil Defense
  • April 3, 2020
  • Comments Off on மும்பை விமான நிலையத்தில் மத்திய தொழிற்காவல் படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு !!

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா உலகை மிரட்டி வரும் சூழலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டினர் விமான பயணம் வழியாக தான் நாடு திரும்ப முடியும்.

இதன் காரணமாக தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் மிக அதிகம், அந்த வகையில் மும்பை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 11 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 142 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தனிமைபடுத்தலில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.