4 மாதங்களில் இரண்டாவது முறையாக தோல்வியுற்ற சீன ராக்கெட் !!

கடந்த புதன்கிழமை அன்று இந்தோனேசிய தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் ஏவப்பட்ட சீன ராக்கெட் வெடித்து சிதறி தோல்வியுற்றது.

புதன்கிழமை அன்று சிச்சூவான் மாகாணத்தில் அமைந்துள்ள சிச்சாங் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட லாங் மார்ச் 3பி ராக்கெட்டின் ஏவுதல் தோல்வியுற்றது.

இந்த ராக்கெட் இந்தோனேசியாவின் பலாப்பா என்1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.