
இன்று காலை சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஜாங்குவா கப்பல் கட்டும் தளத்தில் இறுதிகட்ட கட்டுமான பணியில் இருந்த சீனாவின் முதல் 075ரக உலங்கு வானூர்தி தாங்கி கப்பலில் (TYPE 075 HELI CARRIER) தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கப்பல் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. இது சீனாவின் எதிரி நாடீகளின் சதிவேலையாக இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது.
கடந்த வருடம் கட்டுமானத்தில் இருந்த நமது விசாகப்படினம் ரக நாசகாரி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதும், கொச்சியில் கட்டுமானத்தில் உள்ள விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் கருவிகள் திருடு போனதும் குறிப்பிடத்தக்கது.