சீனாவிடம் 130பில்லியன் யூரோ நஷ்ட ஈடு கேட்டு “இன்வாய்ஸ்” பதிவேற்றிய ஜெர்மனி ஊடகம் !!

  • Tamil Defense
  • April 20, 2020
  • Comments Off on சீனாவிடம் 130பில்லியன் யூரோ நஷ்ட ஈடு கேட்டு “இன்வாய்ஸ்” பதிவேற்றிய ஜெர்மனி ஊடகம் !!

ஜெர்மனியின் ஆன்லைன் பத்திரிகையான பில்ட் சீீனா தங்கள் நாட்டுக்கு 149பில்லியன் யூரோ அதாவது 14,900கோடி யூரோ தர வேண்டும் என இன்வாய்ஸ் ஒன்றினை பிரசுரம் செய்துள்ளது.

அதன்படி சுற்றுலா துறை இழப்பிற்கு 27பில்லியன் யூரோ,
திரைப்பட துறை நஷ்டத்திற்கு 7.2பில்லியன் யூரோ,
சிறு குறு தொழில் நஷ்டத்திற்கு 50பில்லியன் யூரோ, ஜெர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் நஷ்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 10லட்சம் யூரோக்கள் என பட்டியலிட்டுள்ளது.

மேலும் ஜெர்மனியின் ஜி.டி.பி 4.2% கீழே சரிந்தால் ஒரு ஜெர்மானியருக்கு 1,784 யூரோக்கள் வீதம் நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிகழ்வு சீனாவில் கடுமையான சலசலப்பை கிளப்பியுள்ளது.

சீனாவில் இந்த கட்டுரை ஸினோஃபோபியா மற்றும் தேசியவாதத்தின் விளைவு என விமர்சனம் செய்துள்ளது.