அணுஆயுதச் சோதனை செய்ததா சீனா? அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

சீனா லோ-லெவல் அணுச்சோதனையை இரகசியமாக செய்திருக்கலாம் என அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.உலக அளவில்அணுச்சோதனைகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இது அமெரிக்க-சீன பிரச்சனையை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த தகவலை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலால் முதன்முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரானா நோயால் ஏற்கனவே சிதைந்த உறவுகளை இந்த சம்பவம் மோசமாக்கலாம் என அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியன் அமெரிக்கா தவறான தகவல்களை தருவதாக குற்றச்சாட்டியுள்ளார்.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அமெரிக்கா குற்றம் சாட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது என சீன தெரிவித்துள்ளது.