அராக்கன் ராணுவத்துக்கு ஆயுதம் சப்ளை செய்யும் சீனா !!

  • Tamil Defense
  • April 26, 2020
  • Comments Off on அராக்கன் ராணுவத்துக்கு ஆயுதம் சப்ளை செய்யும் சீனா !!

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் பிரிவினைக்காக போராடி வரும் இயக்கம் அராக்கன் ராணுவமாகும்.இந்த இயக்கத்திற்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது என்பது உலகறிந்த விஷயம்.

இந்த இயக்கம் மியான்மர் ராணுவத்துடன் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் வங்காளதேச எல்லையோரம் உள்ள மாகாணம் ஒன்றின் வழியாக மிகப்பெரிய அளவில் சீன தயாரிப்பு ஆயுதங்களை அராக்கன் ராணுவம் பெற்றுள்ளது.

சுமார் 500துப்பாக்கிகள், 30 இயந்திர துப்பாக்கிகள், சுமார் 70ஆயிரம் தோட்டாக்கள் மேலும் நூற்றுக்கணக்கான கையெறி குண்டுகள் ஆகியவற்றை மொஹாக்காலி எனும் கடலோர கிராமம் வழியாக அராக்கன் ராணுவம் பெற்றுள்ளது.

இந்த ஆயுதங்கள் அனைத்தும் சீன தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த அமைப்பிற்கு எதிராக மியான்மர் ராணுவம், வங்காளதேச ராணுவம் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை போராடி வருகின்றன. கடந்த வருடம் தெற்கு மிசோரமில் ஆபரேஷன் சன்ரைஸ் எனும் பெயரில் அராக்கன் ராணுவத்திற்கு எதிராக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.