Breaking News

4 பில்லியன் முக கவசங்களை விற்று தள்ளியுள்ள சீனா-முழுமூச்சான பிசினசில் சீனா

  • Tamil Defense
  • April 6, 2020
  • Comments Off on 4 பில்லியன் முக கவசங்களை விற்று தள்ளியுள்ள சீனா-முழுமூச்சான பிசினசில் சீனா

மார்ச் வரை கிட்டத்தட்ட 4 பில்லியன் முக கவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீன கவசங்களின் தரம் குறித்து உலகம் அச்சப்பட்டாலும் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை என்றே தெரிகிறது.

சீனாவில் கொரானா தொற்று படிப்படியாக குறைந்துவிட்டது.புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அது படிப்படியாக குறைந்தும் வருகிறது என சீனா கூறியிருந்த வேளையில் சீனா தனது தொழில்சாலைகளை மெடிக்கல் சம்பந்தமாக பொருள்களை தயாரிக்க ஊக்குவித்து வருகிறது.

கொரானாவால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க 60000பேர் உயரிழந்து விட்டனர்.இதனால் பாதுகாப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.இதை நல்வாய்ப்பாக தற்போது சீனா பயன்படுத்தி வருகிறது.

கிட்டத்தட்ட 3.86 பில்லியன் முக கவசங்கள், 37.5 மில்லியன் உடல்பாதுகாப்பு உடை,, 16,000 வென்டிலேட்டர்கள், 2.84 மில்லியன் COVID-19 testing kits ஆகியவற்றை கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது சீனா.

இவை அனைத்தும் கிட்டத்தட்ட 1.4 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ளவை.ஆனால் சீனத் தரம் மோசமாக உள்ளதாக துருக்கி,பிலிப்பைன்ஸ்,நெதர்லாந்து,குரோசியா ஆகிய நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

டச் அரசாங்கள் 6 லட்சம் முககவசங்கள் வேண்டாம் என அனுப்பியது.அதே போல ஸ்பெயின் நாடு சோதனை கருவிகள் குறைபாடாக உள்ளது என மறுத்துவிட்டது.

கொரானா சோதனை கருவி மட்டுமே ஒரு நாளுக்கு 4 மில்லியன் என்ற வீதத்தில் சீனா தயாரித்து வருகிறது.