Breaking News

ஊரடங்கின் போது சத்தமின்றி சீன எல்லை அருகே பாலம் திறப்பு !!

  • Tamil Defense
  • April 15, 2020
  • Comments Off on ஊரடங்கின் போது சத்தமின்றி சீன எல்லை அருகே பாலம் திறப்பு !!

அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சுபான்ஸிரி மாவட்டத்தில் தான் இந்த பாலம் எல்லையோர சாலைகள் நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஒரு BRO அதிகாரி கூறுகையில் ” BROவின் 23ஆவது விரைவு பணிக்குழு 430அடி நீளம் கொண்ட இந்த பாலத்தை சுபான்ஸிரி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ளது. இந்த ஒரு பாலம் சுமார் 415 கிராமங்கள் மற்றும் எல்லையோரத்தில் இருக்கும் ராணுவ படையகனருக்கு பயனிளிக்கும்” என்றார்.

ஊரடங்கின் போது மிக கடுமையான சுகாதார கட்டுபாடுகளுக்கு இடையே தான் பணியாளர்கள் மார்ச்17 முதல் தொடங்கி தற்போது இந்த பாலத்தை கட்டி முடித்ததாகவும் கூறினார்.

ஏற்கனவே சேதமுற்றிருந்த பழைய பாலத்தினை அருணாச்சல பிரதேச முதல்வருடைய தனிப்பட்ட கோரிக்கையின் காரணமாக 29 நாட்களில் இந்த பாலத்தை கட்டி முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் கொள்கைப்படி எல்லையோர பகுதிகளில் குறிப்பாக சீன எல்லை அருகே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றனர்.

சீனாவுடனான 3488கிமீ எல்லையில் சுமார் 1126கிமீ அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ளது.