பாகிஸ்தானுக்கு பயிற்சி விமானம் விற்க முன்வந்துள்ள சீனா !!

  • Tamil Defense
  • April 29, 2020
  • Comments Off on பாகிஸ்தானுக்கு பயிற்சி விமானம் விற்க முன்வந்துள்ள சீனா !!

சீனாவின் நான்சாங் நகரத்தை தளமாக கொண்டு செயல்படும் ஹாங்டு ஏவியேஷன் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் விமானம் தான் “ஹாங்டு எல்15 பி” ஆகும்.

இந்த விமானத்தை பயிற்சி விமானமாகவும், இலகுரக போர் விமானமாகவும் பயன்படுத்த முடியும்.

இருவர் இயக்கும் இந்த விமானம் 1729 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது மேலும் 9 ஆயுத தாங்கி அமைப்புகளை கொண்டுள்ளது இதனால் “பி.எல்-12” தொலைதூர ஏவுகணைகளை ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானம் ஒரு ஏசா ரேடாரை கொண்டிருக்கும்.இது 68மைல்கள் தொலைவு வரை கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது.