
சீனா தயாரித்துள்ள இந்த துப்பாக்கிக்கு க்யூ.பி.இசட் 191 என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த துப்பாக்கி 5.48 காலிபர் கொண்டது.
இதன் கார்பைன் வடிவம் 300மீட்டர் தாக்குதல் வரம்பும், தாக்குதல் துப்பாக்கி 400மீட்டர் தாக்குதல் வரம்பும் கொண்டவையாகும்.
இந்த துப்பாக்கி நிமிடத்திற்கு 750தோட்டாக்களை சுடும் திறன் கொண்டதாகும்.
இதற்கு முன்னர் 1997முதல் சீனப்படைகள் பயன்படுத்தி வந்த க்யூ.பி.இசட் 95 ரக துப்பாக்கியின் மேம்படுத்தப்பட்ட வடிவமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.