
ஆச்சரியமளிக்கும் வேகத்தில் சீனா தனது கடற்படை பலத்தை அதிகரித்து வருகிறது.வேகம் தான் அதன் பிரதான குறிக்கோளாகவே உள்ளது.இந்த தலைமுறையில் அது எப்படியும் உலக கடற்பரப்பை ஆள உத்தேசிவிட்டது போலும்.காரணம் அதன் ஆதிக்கத்தை அதிகரிக்க அது காட்டும் ஆர்வமே.
ஆதிக்கம் அதிகமானால் எளிதாக கடற்பரப்பு வர்த்தகத்தை கைப்பற்றலாம்.பல நாடுகளில் சீனா தனது தளம் அமைக்கலாம்.அதன் வழியே அந்தந்த நாடுகளில் ஆதிக்கம்.பொருளாதார பலம் பெறும்.அதை கொண்டு கடன்வழங்குதல்.கடனை குறிப்பிட்ட நிறுவனமோ அரசோ கட்ட தவறும் பட்சத்தில் ஏதேனும் ஒன்றை கையகப்படுத்தி சொத்து சேர்த்தல்.அதன் வழியே வரும் பலம்.மீண்டும் இராணுவத்திற்கு அதிக நிநி..அதன் வழியாக அழிக்கவே முடியாத இராணுவப் படைகள் கட்டமைப்பு..
தற்போது வெகு சில காலக்கட்டத்திலேயே சீனா தனது இரண்டாவது LHD ரக கப்பலை கடற்சோதனைக்கு ஏவியுள்ளதது.
இதே ரக கப்பல் தான் சில நாட்களுக்கு முன் தீப்பற்றி எரிந்து சேதமானது.அதை நமது பக்கங்களிலும் கூட பதிவு செய்திருந்தோம்.அதே ரககப்பலின் இரண்டாம் கப்பலை தான் தற்போது ஏவியுள்ளது சீனா.
40000 டன்கள் எடையுடைய இந்த ரக கப்பல்களை ஒரு சிறிய விமானம் தாங்கி கப்பல்கள் என்றே கூறலாம்.ஆனால் விமானங்களுக்கு பதிலாக வானூர்திகள்.
வீரர்களை தீவு அல்லது எதிரி நாட்டு கடற்புறங்களில் தரையிறக்க இந்த கப்பல்கள் உதவும்.