இந்திய பெருங்கடல் மீது சீனாவின் கண் !!

  • Tamil Defense
  • April 25, 2020
  • Comments Off on இந்திய பெருங்கடல் மீது சீனாவின் கண் !!

சமீபகாலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கடுமையாக முயன்று வருகிறது. தற்போது இந்த கொரோனா சூழலை கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சீனா நினைக்கிறது.

சமீபத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில்
சீனாவின் கடற்படை ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இவை நீர்மூழ்கிகள் நடமாட தேவையான தரவுகளை சேகரிக்கவும், உளவு பார்க்கவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை கட்டுபடுத்த உதவிய ஷியாங்க்யாங்காங் எனும் கப்பல் நமது கடற்படையின் டோர்னியர் உளவு விமானங்கள் விடுத்த எச்சரிக்கை விடுத்த பின்னர் சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள தளத்திற்கு திரும்பி சென்றுள்ளது.

மேலும் சமீபத்தில் அந்தமானுக்கு மிக அருகே சீன கடற்படையின் ஷியான்-1 எனும் சீனக்கப்பல் வந்துள்ளது பின்னர் இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்த பின்னர் திரும்பி சென்றுள்ளது.

ஆகவே சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா அதிகபடுத்த வேண்டியது கட்டாயமாகிறது