
சீனக் கடற்படையின் 71வது தினத்தை முன்னிட்டு புதிய ஆயுதங்கள் என ஒரு பட்டியலை சீன பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.அதில் டைப் 055 டெஸ்ட்ராயர், புதிய உள்நாட்டு தயாரிப்பு விமானம் தாங்கி கப்பல் மற்றும் புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு ரோந்து விமானம் (KQ-200), மற்றும் புதிய நீர்மூழ்கி ஆகியவை இடம்பெற்றது.
அந்த ரிப்போர்ட்டில் எந்த ரக நீர்மூழ்கி என்ற தகவல் இடம்பெறவில்லை.ஆனால் அதில் முக்கிய தளவாடம் என்ற குறிப்பு மட்டும் இடம்பெற்றது.
“ஸ்ரேட்டஜிக்” சொத்து என்ற குறிப்பு இருந்ததால் அது அணுசக்தி பலிஸ்டிக் நீர்மூழ்கி ஆக இருக்க வேண்டும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது அடுத்த தலைமுறை
டைப் 096 SSBN ஆக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.நான்கே வருடத்திற்குள் இந்த நீர்மூழ்கி கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.