170000 உடல் பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்கும் சீனா

  • Tamil Defense
  • April 7, 2020
  • Comments Off on 170000 உடல் பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்கும் சீனா

கிட்டத்தட்ட 170000 சுய உடல்பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிற்கு சீனா வழங்கியுள்ளது.கோரானா நோய்க்கு எதிரான போரில் இந்தியாவிற்கு உதவுவதற்காக இந்த உபகரணங்களை அனுப்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

உள்நாட்டுத் தேவைக்காக 20000 உபகரணங்கள் உட்பட மொத்தம் 190000 உபகரணங்கள் உள்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளது.இந்தியா ஏற்கனவே 387,000 உடைகளை கையிருப்பாக வைத்துள்ளது.

முன்னனியில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களை காப்பாற்ற தேவையான உபகரணங்கள் உள்ளனவா என்ற விவாதத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு தற்போது சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதுதவிர 2 லட்சம் N95 முக கவசங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.1.6 மில்லியன் முக கவசங்கள் தற்போது கைவசம் தயாராக உள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழ்நாடு,மகாராஸ்டிரா ,டெல்லி,கேரளா ,ஆந்திரா மற்றும் இராஜஸ்தான் போன்ற அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிக மெடிக்கல் சப்ளைகள் வழங்கப்பட்டு வருகின்றன.