அருணாச்சல பிரதேசத்தை இணைத்து புதிய மேப் வெளியிட்ட சீனா

  • Tamil Defense
  • April 22, 2020
  • Comments Off on அருணாச்சல பிரதேசத்தை இணைத்து புதிய மேப் வெளியிட்ட சீனா

தனது சர்வதேச எல்லைக் கோடாக அருணாச்சல பிரதேசத்தையும் இணைந்து புதிய மேப் ஒன்றை சீனா வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீனாவின் தேதிய சர்வே மற்றும் பூலோக வரைபட இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஸ்கை மேப் எனும் அமைப்பு தான் இந்த வரைபடைத்தை வெளியிட்டுள்ளது.

1938ல் மக்மோகன் எல்லை ஏற்றுக்கொள்ளப்பட்டது முதல் அருணாச்சல் இந்தியாவின் ஒரு எல்லை மாநிலமாக இருந்து வருகிறது.திபத்தை 1951ல் சீனா ஆக்கிரமித்தது முதல் அருணாச்சலை திபத்தின் ஒரு பகுதி என கூறி வருகிறது.

ஏற்கனவே இந்தியாவின் அக்சய் சின் பகுதியை சீனா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.