
அஸ்ஸாம் மாநிலம் அருகே இந்திய வங்கதேச எல்லை அருகே உள்ள ஒரு ஆற்றின் வழியாக வங்கதேச இளைஞர் ஒருவர் இந்தியாவிற்குள் கொரானா அறிகுறியுடன் நீந்தி வந்தது எல்லைக் கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு கொரானா பாதிப்புள்ளதாகவும் அதற்கு மருத்துவம் பார்க்கவே வந்ததாக பின்னர் நமது எல்லைப் பாதுகாப்பு படையிடம் தெரிவித்துள்ளார்.அப்துல் ஹக் என்ற அந்த இளைஞர் வங்கதேசத்தின் சுனம்கன்ஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.அவரை நமது எல்லைப் படை வீரர்கள் பின்னர் வங்கதேச எல்லைப் படையிடம் அளித்தனர்.
காலை 7.30க்குள் இந்திய பகுதிக்குள் வந்துள்ளார்.அவரை பார்த்த இந்திய கிராம மக்கள் பின்பு நமது எல்லைப் படைக்கு தகவல் அளித்துள்ளனர்.
அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் பேச்சில் குளறுபடி இருந்துள்ளது.கொரானா மருத்துவம் பார்க்கவே இந்தியா வந்ததாக அவர் நமது படைகளிடம் தெரிவித்துள்ளார்.