
செவ்வாய்கிழமை அன்று ஆக்ரா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஆவ்ரோ விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் ,250அடி உயரத்தில் அதன் ஒரு என்ஜின் தீ பிடித்தது, உடனே சுதாரித்து கொண்ட விமானிகள் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினர்.
பல வருடங்களாக இந்த விமானங்களை மாற்ற முயற்சித்த இந்திய விமானப்படையின் முடிவுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியது.
பல விமானங நிறுவனங்கள் பங்கு பெற்ற இப்போட்டியில் ஏர்பஸ் நிறுவனத்தின் சிஒ295 விமானம் வெற்றி பெற்றது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் சுமார் 16விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்படும், பின்னர் 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என தெரிகிறது.