இந்திய, இந்தோனேசிய மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புக்கு அடித்தளமிடும் ஆஸ்திரேலியா !!
1 min read

இந்திய, இந்தோனேசிய மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புக்கு அடித்தளமிடும் ஆஸ்திரேலியா !!

இந்திய பெருங்கடல் பகுதி நாளுக்கு நாள் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதிகார பலம் மிக வேகமாக மாறி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள பேரி ஒ ஃபேரல் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பேசும்போது இந்தியா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்திய பெருங்கடலின் காவலர்களாக விளங்கும் ஆற்றல் கொண்ட நாடுகள் என்றும் ஆகவே மூன்று நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

மேலும் கூறுகையில் எதிர்காலத்தில் இந்தோ பசிஃபிக் பிராந்தியம் தான் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக அமையும் எனவும் கூறினார்.

மேலும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய பி8, சி17, சி130 ஆகிய விமானங்கள் மற்றும் இனி வாங்கவுள்ள எம்.ஹெச் 60ஆர் உலங்கு வானூர்திகளும் இந்திய ஆஸ்திரேலியா இடையேயான ஒத்துழைப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவித்தார்.