
சமீபத்தில் நமது 5 சிறப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு நாம் பிரங்கி தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தோம். ஆனால் இது பாகிஸ்தானுடைய புத்தியை துளியும் மாற்றப்போவது இல்லை.
பாகிஸ்தான் நமது நிலைகளை தாக்குவதும், பயங்கரவாதிகளை ஊடுருவ வைத்து தாக்குதல் நடத்துவதும் அதற்கு நாம் பிரங்கி தாக்குதல் மூலம் பதிலடி கொடுப்பது என தொடர்ச்சியாக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதனை பாகிஸ்தானும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சில சமயங்களில் அவர்களும் நம் மீது பிரங்கி தாக்குதல் நடத்தக்கூடும்.
பிரங்கி தாக்குதல்கள் ராணுவ ரீதியாக அத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
ஆகவே இந்தியா பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் பாலகோட் அல்லது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற தாக்குதல்களை நடத்த வேண்டும்.
இதனையும் அவ்வப்போது நடத்திவிட்டு அமைதியாகி விடக்கூடாது. ஒவ்வொரு முறை பாகிஸ்தான் நமது பொறுமையை சோதிக்கும் போதும் இந்தியா மேற்குறிப்பிட்ட வகையில் கடுமையான பதிலடியை துணிந்து எடுக்க வேண்டும்.
இதற்கு பாகிஸ்தான் பதிலடி தந்தால் அல்லது தர முயன்றாலே இந்தியா மறுபடியும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்.
அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பாகிஸ்தானிடம் பணிந்து போக போக அவர்களுக்கு திமிரெறி நம்மை துச்சமாக எண்ணி நம்மை தாக்கி கொண்டே இருப்பார்கள்.
ஆகவே இந்தியா தனது SOFT STATE தன்மையை களைந்து விட்டு தேவையான போதெல்லாம் அதிரடி முடிவுகள் எடுக்கும் துணிச்சலை பெற வேண்டும்.