2020 ஏப்ரல் வரை 54 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ள நமது பாதுகாப்பு படைகள்

  • Tamil Defense
  • April 28, 2020
  • Comments Off on 2020 ஏப்ரல் வரை 54 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ள நமது பாதுகாப்பு படைகள்

காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டுமே 7க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் வீழ்த்தியுள்ளது.இந்த மாதம் மட்டுமே 22 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த வருட ஏப்ரல் வரை வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.

கொரானா தாக்கம் இருந்தபோதும் தகுந்த பாதுகாப்புடன் காஷ்மீரில் தொடர்ந்து ஆபரேசன் நடைபெற்று தான் வருகின்றன.பயங்கரவாதிகள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள ஓடத்தான் செய்கின்றன.தற்போது காஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைவாகவே தான் உள்ளது.

எல்லையில் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் பயங்கரவாத ஊடுருவலும் தடுக்கப்பட்டோ அல்லது ஊடுருவும் பயங்கரவாதிகளை உடனடியாக வீழ்த்தவோ இராணுவம் தொடர்ந்து ஆபரேசன்கள் நடத்துகிறது.

2019ல் 190 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.2018ல் நடந்ததை விட 30% இது குறைவு தான்.

தற்போது எல்லையில் 300 பயங்கரவாதிகள் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஊடுருவ காத்திருக்கின்றனர்.இவர்களை எதிர்கொள்ள இராணுவம் சிறப்பு பாதுகாப்பு வலை விரித்து காத்துள்ளது.

மனித உளவு வலை மற்றும் தொழில்நுட்ப உளவு வலை என இரண்டின் வழியாகவும் தற்போது 16 பயங்கரவாத முகாம்களம எல்லையில் முளைத்துள்ளதை இராணுவம் அறிந்துள்ளது.