
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இலகுரக தேஜாஸ் போர்விமானத்தில் பயன்படுத்தி கொள்ள உருவாக்கிய முக்கிய தொழில்நுட்ப அமைப்பு தற்போது கொரோனாவுக்கு எதிரான போரில் தேசத்திற்கு உதவ உள்ளது.
இந்த அமைப்பு “ஆன் போர்ட் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் சிஸ்டம்” என அழைக்கப்படுகிறது, அதாவது போர்விமானிகள் நீண்ட தூர நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது விமானிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் வகையில் ஒரு தயாரிப்பு அமைப்பு இருக்கும்.
இதனை அடிப்படையாக கொண்டு மெடிக்கல் ஆக்ஸிஜன் ப்ளான்ட் ஒன்றினை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த அமைப்பானது மாலிக்யுலார் ஸீவ் மற்றும் ப்ரஷர் ஸ்விங் அப்ஸார்ப்ஷன் டெக்னிக் ஆகியவற்றின் மூலமாக நேரடியாக சுற்றுச்சூழலில் இருந்து ஆக்ஸிஜனை தயாரிக்கும்.
இது விமானத்தில் இருக்கும் இரு அல்லது ஒரு போர் விமானிக்கு ஆக்ஸிஜன் வழங்கும் வகையில் அளவில் சிறிதாக இருக்கும்.
ஆனால் இது மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும்போது பல பேருக்கு ஆக்ஸிஜன் வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகும் அதனால் இது பெரிய அமைப்பாக இருக்கும்.
இது செமிலாக் அமைப்பால் அங்கீகரிக்கபட்ட அமைப்பாகும்.
மேலும் இது போக்குவரத்து வசதிகள் பெரிய அளவில் இல்லாத இடங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.
ஏற்கனவே லே மற்றும் லடாக் , தவாங் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனைகளில் வெற்றிகரமாக இது செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பானது ஐ.எஸ்.ஒ 1008, அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்திய தரச்சோதனைகளில் வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.