Breaking News

நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக பி -8 ஏ கடல்சார் ரோந்து விமானத்தை இடைமறித்த ரஷ்ய ஜெட் விமானம்

  • Tamil Defense
  • April 21, 2020
  • Comments Off on நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக பி -8 ஏ கடல்சார் ரோந்து விமானத்தை இடைமறித்த ரஷ்ய ஜெட் விமானம்

அமெரிக்க கடற்படையின் பி -8 ஏ விமானம் மத்திய தரைக்கடல் கடல் வழியாக சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது ஒரு ரஷ்ய எசு -35 விமானம் சுமார் 100 நிமிடங்கள் இடைமறித்து தொடர்ந்து பறந்துள்ளது.

இது போல இரஷ்ய விமானம் வழிமறிப்பது இது இரண்டாவது முறையாகும்.முதல் முறை நடைபெற்ற வழிமறித்தல் பாதுகாப்பானதாக இருந்ததாகவும் அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா தெரிவித்திருந்தது.ஆனால் இரண்டாவது முறை பாதுகாப்பற்ற முறையில் தங்கள் விமானத்தை தொடர்ந்ததாக அமெரிக்க கூறியுள்ளது.

சு-35 விமானம் அதிக வேகத்துடனும் ,வளைந்து நெளிந்தும் அமெரிக்க விமானத்திற்கு 25 அடி வரை நெருங்கி சென்றதாக அமெரிக்க கடுப்புடன் கூறியுள்ளது.

ஆனால் பி-8ஏ விமானம் அதே உயரத்தில் அதே வேகத்தில் தொடர்ந்து பறந்ததாகவும் இரு விமானங்களின் நலன் கருதி பிரிந்து வேறு பக்கம் சென்றுவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.சிறந்த விமானிக்கு இது உகந்தது அல்ல என்றும் இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது எனவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.