
அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பல்கள் “ஆர்லெய் பர்க்” ரகத்தை சேர்ந்தவை ஆகும். இந்த ரகத்தை சேர்ந்த சுமார் 67 கப்பல்கள் தற்போது சேவையில் உள்ளன.
இதனை கட்டிய பாத் ஐயன் வொர்க்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த, மிகப்பெரிய அதிநவீன ஸம்வால்ட் ரக நாசகாரி கப்பல்களை கட்டி வருகிறது.
சுமார் 22ஆயிரம் டன்கள் எடை , 610அடி நீளம், 80அடி அகலம் என பிரமாண்ட கட்டமைப்பு கொண்ட இந்த கப்பலில் பல்வேறு வகையான ஆயுதங்களை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல முடியும். இது மிகப்பெரிய அளவில் ஸ்டெல்த் திறனை கொண்டது.
கடல் சோதனைகளில் இந்த வகை கப்பல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது எனவும் கடற்படையினர் பல்வேறு திறன்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
முதலில் 32 கப்பல்களை வாங்க நினைத்த அமெரிக்க கடற்படை அதிக விலை காரணமாக அமெரிக்க காங்கிரஸ் விமர்சனத்தால் 3 கப்பல்களுடன் நிறுத்தி கொண்டது. ஒரு கப்பலின் விலை 4பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.