
அமெரிக்காவின் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனம் எம்.பி.எஃப் திட்டத்தின் கீழ் புதிய இலகுரக டாங்கி ஒன்றை தயாரித்துள்ளது.
சுமார் 38டன்கள் எடை மற்றும் 120 அல்லது 105 மிமீ அளவுள்ள துப்பாக்கியை இது கொண்டிருக்கும்.
சமீபத்தில் இந்த டாங்கி முதல்முறையாக பொதுவெளியில் அறிமுகம் செய்யப்பட்டது .
இத்தகைய டாங்கிகளில் சுமார் 506 டாங்கிகளை அமெரிக்க ராணுவம் வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.