
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பி1பி லான்ஸர் எனும் சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அறுவைசிகிச்சை முடிந்து கவனிக்கப்படும் இடத்திற்கு மிக அருகே பறந்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகானத்தில் உள்ள எல்ஸ்வொர்த் விமானப்படை தளத்தில் இருந்து 37ஆவது குண்டுவீச்சு படையணியை சேர்ந்த பி1பி லான்ஸர் குண்டுவீச்சு விமானம் சுமார் 30மணி நேர நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிழக்கு பசிஃபிக் பகுதிக்கு அனுப்பபட்டது. இந்த விமானம் ஜப்பான் விமானப்படையின் மிசாவா படைத்தளத்தில் இருந்து இயங்கும் எஃப்2 போர் விமானங்களுடன் இணைந்து ஜப்பான் எல்லையில் பயிற்சி மேற்கொண்டன.
இதற்கு பின்னர் வடகொரியாவின் வோன்ஸான் நகரத்தில் இருந்து 500மைல்கள் தொலைவில் இந்த விமானம் பறந்துள்ளது என தெரிகிறது.
இந்த நகரத்தில் தான் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தலைவர் அறுவைசிகிச்சை பின் கவனிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.