
சமீபத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மலேரியா எதிர்ப்பு சிகிச்சையில் பயன்படுத்தி வரப்படும் ஹைட்ராக்ஸிக்ளோராக்யினை அமெரிக்காவிற்கு தர கோரிக்கை விடுத்தார். இதற்கு பிரதமர் மோடி இந்தியா தன்னால் இயன்ற உதவிகளை செய்யும் என உறுதி அளித்தார்.
தற்போது வெள்ளை மாளிகை வட்டார தகவல்களின் படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா அந்த மருந்துகளை தரவில்லை எனில் நிச்சயமாக பதிலடி இருக்கும் என கூறியதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று தொடங்கிய நேரத்தில் இந்தியா சில மருத்துவ பொருட்களின் ஏற்றுமதியை தனது தேவையை கருத்தில் கொண்டு நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.