
லாக்ஹீட் மார்ட்டின் தலைமை நிதி அதிகாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் சர்வதேச அளவில் எஃப்16 போர் விமானங்களை விற்க பெரிய அளிவில் வாய்ப்புளத்தாக தெரிவித்தார்.
எஃப்35 போன்ற ஐந்தாம் தலைமுறை விமானங்களை வாங்க முடியாத நாடுகளுக்கும், விமானப்படையை நவீனபடுத்த நினைக்கும் நாடுகளுக்கும் 4ஆம் தலைமுறை எஃப்16 விமானம் சிறந்த தேர்வாக அமையும் என கூறினார்.
பஹ்ரைனுக்கு 16 விமானங்களை 2018ஆம் ஆண்டு விற்ற பிறகு, பல்கேரிய விமானப்படைக்கு 8, ஸ்லோவாக்கிய விமானப்படைக்கு 16 விமானங்கள் என தற்போது 24விமானங்களுக்கான ஒப்பந்தம் கையில் உள்ளது மேலும் தைவான் விமானப்படைக்கு 66 விமானங்களை விற்கவும் முயன்று வருகிறது.
மேலும் ஆஃப்ரிக்காவில் போட்ஸ்வானா விமானப்படை, தென் அமெரிக்காவில் அர்ஜென்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகளுக்கும் தென் கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா போன்ற நாடுகள் எஃப்16 விமானங்களை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன எனவும் அவர் கூறினார்.