தென்சீன கடலில் சீனாவை கடுப்பேற்றும் அமெரிக்க கடற்படை !!
1 min read

தென்சீன கடலில் சீனாவை கடுப்பேற்றும் அமெரிக்க கடற்படை !!

தென்சீன கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் 5ஆவது விமானந்தாங்கி தாக்குதல் படையணி சில நகர்வுகளில் ஈடுபட்டு உள்ளது.
இந்த படையணி அமெரிக்க கடற்படையின் 7ஆவது கடற்படை பிரிவுடைய அதிகார வரம்பின் கீழ் வருகிறது.

இன்று இந்த படையணியின் தலைமை கப்பலான நிமிட்ஸ் ரக விமானந்தாங்கி கப்பல் யு.எஸ்.எஸ். ரோனால்ட் ரேகன், யு.எஸ்.எஸ் பாக்ஸர் எனும் நிலநீர் தாக்குதல் கப்பல் , 1 டைகான்டெரெகா ஏவுகணை கப்பல், 2 ஆர்லிபர்க் நாசகாரி கப்பல்கள் சகிதம் இந்த படையணி நகர்ந்துள்ளது.

இப்படையணியில் யு.எஸ்.எஸ். பாக்ஸர் சேராது, ஆனால் யு.எஸ்.எஸ் ரோனால்ட் ரேகன் உட்பட 3 டைகான்டெரெகா ஏவுகணை கப்பல்கள் மற்றும் 8 ஆர்லிபர்க் நாசகாரி கப்பல்கள் உள்ளன.

இதனை தவிர்த்து அமெரிக்க கடற்படையின் மற்றோரு நிலநீர் தாக்குதல் கப்பலான யு.எஸ்.எஸ் அமெரிக்கா தென் சீன கடலில் இரண்டு நாட்களாக மலேசிய மற்றும் சீன கப்பல்களுக்கு இடையே
பிரச்சினை நடைபெற்று வரும் மேற்கு கபெல்லா பகுதி நோக்கி விரைந்துள்ளது.

மேலும் தென்சீன கடலின் கிழக்கு பகுதியில் யு.எஸ்.எஸ். அமெரிக்காவையும், சீன கடற்படையின் லீயானிங் விமானந்தாங்கி கப்பலையும் சேர்த்து மொத்தம் 8 போர்க்கப்பல்கள் வெறுமனே 850 சதுர கிமீ பகுதியில் உள்ளதாகவும், இந்த 8 போர் கப்பல்களும் சீன மற்றும் அமெரிக்க கடற்படையை சார்ந்தவை என கூறப்படுகிறது.

இந்த நகர்வுகள் காரணமாக தென்சீன கடல் பகுதி மிகுந்த பரபரப்பு நிறைந்த பகுதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.