ஐ.எஸ் பயங்கரவாதி அஸ்லாம் ஃபருக்கியை ஒப்படைக்க கோரிய பாக்-மறுத்த ஆஃப்கன் !!

  • Tamil Defense
  • April 12, 2020
  • Comments Off on ஐ.எஸ் பயங்கரவாதி அஸ்லாம் ஃபருக்கியை ஒப்படைக்க கோரிய பாக்-மறுத்த ஆஃப்கன் !!

வியாழக்கிழமை அன்று பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா தாக்குதலை நடத்திய ஐ.எஸ் இயக்க தலைவன் அஸ்லாம் ஃபருக்கியை தங்களிடம் ஒப்படைக்க வைத்த கோரிக்கையை ஆஃப்கானிஸ்தான் அரசு நேற்று நிராகரித்தது.

இதுகுறித்து ஆஃப்கன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான் அரசு ஐ.எஸ் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளதாகவும் அதனால் ஒப்படைக்க கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதனை ஆஃப்கன் அரசு நிராகரித்துள்ளது, காரணம் ஆஃப்கன் மண்ணில் பல தாக்குதல்கள் நடத்தி பல ஆஃப்கன் மக்களை கொன்றுள்ள காரணத்தால் தனது நாட்டு சட்டப்படி அவனை தண்டிக்க உள்ளதாகவும் மேலும் இது சம்பந்தமான ஒப்பந்தங்கள் ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஃபருக்கி ஐ.எஸ் இயக்கத்தில் இணைவதற்கு முன்பு தெஹ்ரிக் இ தலிபான் என்ற இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.