
சமீபத்தில் ஆஃப்கன் தலைநகர் காபூலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு காரணமாக பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அந்த சமயத்தில் அவர்களுடன் கைதான
அலி முஹம்மது இஸ்லாமாபாத் நகரை சேர்ந்தவன் என கூறிக்கொள்ள மேலும் விரிவான விசாரணையில் அவன் அபு உஸ்மான் அல் காஷ்மீரி என்ற அய்ஜாஸ் அஹமது
அஹங்கார் என்பவன் என தெரிய வந்தது. இவன் ஜம்மு காஷ்மீர் ஐ.எஸ். பிரிவுக்கு தலைவனாவன்.
ஶ்ரீநகரின் நாவா கடல் பகுதியை சேர்ந்து இவனுடைய மாமா முன்னாள் லஷ்கர் இ தொய்பா தளபதியும், தெஹ்ரிக் உல் முஜாஹிதின் இயக்க தலைவனுமான அப்துல் கஸாலி எனப்படும் அப்துல் கரி தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அஹங்கார், பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஐ.எஸ் இயக்கத்தின் ஆன்லைன் ஆட்சேர்ப்பு முகவரான ஹூசாஃபா அல் பாகிஸ்தானி என்பவனுடைய மாமா ஆவான். கடந்த 2018ஆம் ஆண்டு ஹூசாஃபா ஆஃப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த அஹங்கார் பட்காமில் பிறந்து ஶ்ரீநகரில் வசித்து வந்தான், பின்னாளில் கஸாலியின் மகள் ருக்ஸானாவை திருமணம் செய்து கொண்டான். பின்னர் தெஹ்ரிக் உல் முஜாஹிதின் மற்றும் அல் பாதர் ஆகிய பயங்கரவாத இயக்கங்களுடனான தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்டு ஶ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டவன் 90களில் விடுதலை செய்யப்பட்டான்.
பின்னர் அஹங்கார் மற்றும் ருக்ஸானா இருவரும் வங்காளதேசம் வழியாக பாகிஸ்தான் சென்று அங்கு ஐ.எஸ்.ஐ ஆல் இஸ்லாமாபாத் நகரில் தங்கவைக்கப்பட்டான்.
மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு பாக் குடியுரிமைக்காக ஐ.எஸ்.ஐ யே இவனுக்கு பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சாய்ரா எனும் பெண்ணை மணம் முடித்து வைத்தது.
இந்த சாய்ராவின் இரு சகோதரர்களும் அல் காய்தா தளபதிகள் ஆவர். இவர்கள் அப்துல் வாஹித் எனப்படும் ஸூபைர் மற்றும் அமீர் , அப்துல் வாஹித் தெற்கு வசிரிஸ்தான் பகுதிக்கு பொறுப்பான அல் காய்தாவின் மீரான் ஷா பிரிவிற்கு தலைவன் ஆவான்.
2009ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ ஆசியோடு இஸ்லாமாபாத்தில் இருந்து சாய்ராவுடன் புறப்பட்ட அஹங்கார் தெற்கு வசிரிஸ்தான் சென்றான். ஒரு வருடம் கழித்து ருக்சானாவும் பிள்ளைகளும் தெற்கு வசிரிஸ்தான் பகுதிக்கு சாய்ராவின் சகோதரன் உதவியோடு சென்றனர்.
அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் இயக்கத்தில் இணைகிறான். தனது மருமகன் பாகிஸ்தானியுடன் மிக தீவிரமாக செயல்பட்டான். இருவருக்கும் லஷ்கர் இயக்கத்துடன் ஆழமான தொடர்புகள் இருந்தன. அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானி கொல்லப்பட்டான.
இந்த வருடம் ஃபெப்ரவரி 13ஆமு தேதி அஹங்காருடைய மாமா கஸாலி ஶ்ரீநகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் குலாம் மொய்தீன் தார் என்பவனால் பாக் வழியாக வரும் பயங்கரவாத ஆதரவு பணத்தை விநியோகம் செய்வது தொடர்பாக எழுந்த விரோதம் காரணமாக கொன்றுள்ளான்.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மட்டுமில்லாது இந்திய துணைகண்டத்தில் இருக்கும் ஆழமான பயங்கரவாத உறவு வெளிப்பட்டுள்ளது.